விரைவில் உதயமாகிறது ராணுவப்பள்ளி !

விரைவில் உதயமாகிறது ராணுவப்பள்ளி !

Share it if you like it

* உ.பி., மாநிலம் புலந்த்செகரில், முதல் ராணுவ பள்ளி துவங்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருந்த ராஜு பையாவின் பெயரில், ‘ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர்’ என அழைக்கப்படும். பள்ளியின் கட்டடம் தயாராக உள்ள நிலையில் வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் துவங்கும்.

* பள்ளியில், என்.டி.ஏ(NDA), கடற்படை அகாடமி மற்றும் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள். பிப்.,23 வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். மார்ச் 1ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும். பின் நேர்காணல் நடத்தப்பட்டு, ஏப்.,6 முதல் வகுப்புகள் நடைபெறும். போரில் வீர மரணமடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்படும். தியாகிகளின் சலுகையாக வயது தளர்வு இருக்கும். வேறு இட ஒதுக்கீடு கிடையாது.

* இப்பள்ளியில், முதல்கட்டமாக 6ம் வகுப்பில் 160 மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும். மாணவர்களுக்கு கல்வி, தார்மீக, ஆன்மீக வழிகாட்டுதல்களை வழங்குவதே பள்ளியின் முக்கிய நோக்கம், இவ்வாறு பள்ளியின் பொறுப்பாளர் சிவ் பிரதாப் சிங் தெரிவித்தார்.

SOURCE : VSK DTN


Share it if you like it

One thought on “விரைவில் உதயமாகிறது ராணுவப்பள்ளி !

  1. ஆர்மி_ மிலிட்டரி_ ராணுவம் நடத்தும் பள்ளி ஒவ்வொரு ஊரிலும் திறந்தால் என்ன? மத்திய அரசு பள்ளிகள் தரமான கல்வி உயர்ந்த வாழ்வு கிடைக்கும். மூன்று மொழிகளில் கல்வி.
    தேசிய ஒருமைப்பாடு நலமாக இருக்கும்.
    Disciplined life மாணவர்களுக்கு கிடைக்கும்.
    நாடு திறமை நோக்கி பயணிக்க வலுவான தளம் அமையும்.
    கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எல்லா நிலை மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
    தனியார் மயம் என்ற நிலை மாறி மத்திய அரசு கல்வி யில் முதன்மை பங்கு ஆற்றிட வழி வகுக்கும்.
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏. வணக்கம்.

Comments are closed.