Share it if you like it
வேளாண் மசோதா குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தற்பொழுது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். விவசாய மசோதா குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு..
- வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சியே.
- விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 8 சதவீத வரி இனி கிடையாது மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு வெளியே மற்ற வரிகள் இருக்காது.
- விவசாயிகளுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது 30 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு விளைபொருளுக்கான தொகை கிடைத்துவிடும்.
- வேளாண் சட்டத்தில் எந்தவித குழப்பமும் இல்லை.
- வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர்.
- 3 வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகள் வேளாண் விளைபொருளை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம்.
- விவசாயிகள் தொடங்கி நுகர்வோர் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- பெரு நிறுவனங்கள் விவசாயிகளை சுரண்டும் என்ற அச்சத்திற்கு இடமில்லை
- விவசாயிகளுக்கு இந்த புதிய சட்டங்கள் காரணமாக ஏற்படக்கூடிய குறைகளை தீர்க்க அவர்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ளலாம்.
- விவசாயிகளின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றபடுவதற்கு முன்பாக அனைத்து மாநில விவசாயிகளுடன், வேளாண் நிபுணர்கள் உடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது..
- குறைந்த பட்ச ஆதரவு விலை தொடரும். எந்த வகையிலும் அது நீக்கபடமாட்டது. இது குறித்து பரப்பப்படும் தகவல்கள் வெறும் வதந்திகளே.
- வெறும் அரிசி, கோதுமைக்கு, வழங்கப்பட்டு வந்த குறைந்த பட்ச ஆதரவு விலை ஆதாயம் 2014 ஆண்டுக்கு பிறகு இதர விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் நீட்டிப்பு
- APMC சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்தால் 8.5 சதவிகித வரி செலுத்த வேண்டியுள்ளது. மேலும், இடைத்தரகர்களுக்கு பணம் வழங்க வேண்டும். வெளியே விற்பனை செய்தால் விவசாயிகள் வரி செலுத்த தேவையில்லை.
- 8 – 8.5 % வரை மண்டிகளில் கட்டணமாகவும், இடை தரகர்களுக்கு வரியாகவும் கட்டிக்கொண்டிருந்த விவசாயிகள் இனி அந்த வரியை செலுத்த தேவையில்லை..
- மேற்கொள்ளபட்ட ஒப்பந்தங்களில் முரண்பாடு ஏற்படும்போது விவசாயிகள் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அனைத்து மாவட்டங்களிலும் எளிதில் அணுகக்கூடிய குறை தீர்க்கும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
Share it if you like it