Share it if you like it
- வீரத்துறவி இராம கோபாலன் 19-9-1927 ல் தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர்.
- 1945ல் RSS – ல் சேர்ந்தார்.
- டிப்ளமோ , ஏ.எம்.ஐ.ஈ. படித்து முடித்த பிறகு மின்சாரத் துறை வேலையை உதறிவிட்டு முழுநேர RSS தொண்டரானார் (பிரச்சாரக்).
- RSS இயக்கத்தின் பிராந்த பிரச்சாரக் (மாநில அமைப்பாளர்) என்ற பொறுப்பு வரை படிப்படியாக தமிழகம் முழுவது RSS வேலைகள் வளரக் காரணமாக இருந்தவர்.
- 1948 ல் RSS தடை செய்யப்பட்ட போதும் , 1975 எமர்ஜென்சி நேரத்திலும் தமிழகத்தில் RSS பேரியக்கத்தை வழிநடத்தியவர்.
- தமிழகத்தில் நிலவிய அசாதாரண இந்து விரோத சூழ்நிலையை கருத்தில் கொண்டு 1980 ம் ஆண்டு RSS ன் வழிகாட்டுதலில் இராம.கோபாலன் உருவாக்கிய இயக்கம் தான் இந்து முன்னணி .
- இந்து முன்னணி வளர்ச்சிக்காக இராம கோபாலன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். தமிழகத்தில் அவர் கால் படாத ஊர்களே கிடையாது.
- 1984- ல் மதுரை ரயில் நிலையத்தில் இவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்தது. இதில் இவரது கழுத்திலும் தலையிலும் பலத்த வெட்டு. தழும்பை மறைக்க அன்றிலிருந்து காவித் தொப்பியணிய ஆரம்பித்தார் .
- ஆனால் இவை எல்லாம் அவரது தேசப் பணியை முடக்கவில்லை. பல மடங்கு உற்சாகத்துடன் இந்துமுன்னணி பேரியக்க கிளைகளை விதைத்தார்.
- இன்று தமிழகம் முழுவதும் ஆல்போல் தழைத்து; அருகு போல இந்து முன்னணி வேரோடியிருப்பதற்கு காரணம் கோபால் ஜி தான்.
- அவர் வேறு, இயக்கம் வேறு அல்ல. இந்துமுன்னணி தான் கோபால் ஜி; கோபால் ஜி தான் இந்து முன்னணி.
- அவரைப் போலவே செயல்திறம் மிக்க, எதிர்பார்ப்பற்ற, தேசபக்தி கொண்ட எண்ணற்ற மாவீரர்களை, ஊழியர்களைக் கொண்ட இயக்கமாக இந்துமுன்னணி வளர்ந்திருக்கிறது.
- தேசத்திற்காக, தர்மத்திற்காக தனது வாழ்வையே அர்பணமாக்கிக் கொண்டவர் கோபால் ஜி.
- தனக்கென ஒரு வாழ்க்கை என்ற ஒன்று அவரிடத்தில் இல்லை. இயக்கமே அவரது வீடு. தொண்டர்களே அவரது உறவினர்கள் .
- இத்தகைய மாபெரும் மகான் இன்று இல்லை. அவரது வாழ்வே நமக்கு பாதை.
இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி. - அவரவர் பகுதிகளில் வீர அஞ்சலி, மௌன அஞ்சலி நிகழ்ச்சி நடத்திடுவோம்.
Share it if you like it