Share it if you like it
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – 1/4 கிலோ,
மிளகு – 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
பூண்டு – 3 பல்,
கடுகு – தாளிக்க.
செய்முறை :
வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
பெரிய வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் வெண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு வதங்கிய வெண்டைக்காயில் அரைத்த மிளகு கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும்.
நன்கு வெந்தபின் இறக்கவும்.
சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை ரெடி.
Share it if you like it