இன்று ஒரு டீ குடித்தால் கூட paytm’யில் தான் பணத்தை அனுப்புகிறார்கள். ஆனால் அன்று ‘டிஜிட்டல் இந்தியா’ என்று சொன்ன போது பலரது பதில் நக்கலான சிரிப்பு மட்டுமே.
இந்திய அரசு கடந்த ஆண்டில் மூன்று காலாண்டுகளில் மட்டும் DBT மூலம் 28,700 கோடி ரூபாயை சேமித்துள்ளது. அதாவது, அரசு பொதுநல திட்டங்களில் இருந்து தேவையில்லாமல் வெளியேறும் பணம் குறைந்துள்ளது. காரணம் டிஜிட்டல் முறை இடைத்தரகர்களை ஓரம் கட்டிவிட்டது.
வேளாண் சட்டம் உருவாக்கி தருகிற வாய்ப்பும் இதே தான்.
விளைய வைத்த விவசாயியை விட இடைத்தரகர்கள் அதிக லாபம் பார்ப்பதால், இடைத்தரகர்களை மட்டும் நம்பியிருக்காமல் விவசாயிகளே தேவைப்படும் இடங்களுக்கு, குறிப்பிட்ட லாபத்தில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நேரடியாக விற்றுக் கொள்ளட்டும் என்பதே அரசின் நோக்கம்.
இதனால் போட்டி அதிகரிக்கும். வேளாண்மை மேலும் செழிக்கும். உணவு பொருட்கள் சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.
அதே சமயம் குறைந்தபட்ச ஆதார விலையும் தொடரும். அரசு கொள்முதலிலும் எந்த மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் 2009-2014 விட 2014-2019’யில் அரசு கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை அதிகரித்து தான் உள்ளது.
இருப்பினும் எதிர் கட்சிகள் வழக்கம் போல அவர்களது வேலையைத் தொடங்கிவிட்டார்கள். ஏனென்றால் ஓட்டுகள் பறிபோகும் அபாயம்.
CAA வந்தால் இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்படுவர்.
NRC வந்தால் தாத்தாவின் பிறப்பு சான்றிதழைக் காட்ட வேண்டும்.
NEP- நவீன குலக்கல்வி முறை’ என்ற வரிசையில் ‘விவசாயிகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது’ என்கிற கோஷம்.
ஆனால் உண்மையில் இப்போது தான் விவசாயிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
-தினா
சமூக ஊடக எழுத்தாளர்