ராஷ்டிரிய வர்காரி பரிஷத் என்னும் பிரிவு மகாராஷ்டிரா மாநிலத்தில் பண்டார்பூரில் பரம்பரை பரம்பரையாக வாழும் மக்கள் . கிருஷ்ணரின் ஒரு வடிவமாகக் கருதப்படும் விட்டலை அவர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுபவர்கள்.
இந்நிலையில் வர்காரி பரிஷத் தம் உறுப்பினர்களுக்கு ஓர் கட்டளையிட்டுள்ளது. ராமாயணம் இல்லை, தெய்வங்கள் இல்லை, மகான்கள் மற்றும் இந்து மதத்தை விமர்சிப்போரை ஆதரிக்கிறார்.
அதனால் நம் நிகழ்ச்சிகளில் அவரை அழைப்பதைத் தவிர்க்குமாறு சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. நம் வழிபாட்டை கடுமையாக விமர்சிப்போரிடம் தொடர்பில் இருப்பதால் ஷரத் பவார் இந்து எதிர்ப்பாளர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே நம் நிர்வாகிகள் அவரிடம் கவனமாக இருக்குமாறு அறிக்கை அளித்துள்ளது. மேலும் அவர் ஹிந்து என்பதை மறந்து விடக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கியிருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.