ஜிஸியா வரியை விட மோசமானது ஹலால் வரி, மத ரீதியாக மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. சாப்பாட்டு வரியாக குறிப்பிட்ட மதத்துக்கு நாம் செலுத்தும் தொகை வருடத்துக்கு மூவாயிரம் கோடிக்கு மேல் இருக்க கூடும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆமாம் அது தான் உண்மை.
அந்த குறிப்பிட்ட மத முறைப்படித்தான் அசைவம் வெட்டப்பட்டு வருகிறது. இந்த ஹலால் சான்றிதழ் வாங்க முதல் முறை பதிவு செய்ய 25,000 ரூபாய், வருடா வருடம் மறு பதிவு செய்ய 15,000 ரூபாய், ஒவ்வொரு பொருளுக்கும் சான்றிதழ் பெற 1000 ரூபாய், அந்த அறிவிப்பை கடைகளிலே வைக்க 20,000 ருபாய், ஒவ்வொரு முறை ஆய்வு செய்ய ஒரு நாளைக்கு ஒருவருக்கு 1,000 ரூபாய். என குறைந்த பட்சம் வருடத்துக்கு 50,000 ருபாய் ஆகிறதாம் . இது ஒரு கடை, அல்லது இறைச்சி கடை மற்றும் அசைவ உணவகத்துக்கு மட்டும் ஆகும் செலவு.
தமிழகத்திலே மட்டும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் கடைகள் இந்த சான்றிழதை வாங்குகிறது. அதற்கு அவர்கள் செலுத்தும் தொகை 500 கோடி ரூபாய் வரை இருக்க கூடும். சும்மாவே வருடத்துக்கு ஐநூறு கோடி ரூபாயை சாப்பாட்டு வரியாக அந்த குறிப்பிட்ட மதத்துக்கு கட்டுகிறோம். அந்த மதத்தினர் மட்டும் தான் இறைச்சி கடை வைத்து வேலை செய்ய முடியும்.
இதனால் மாற்று மதத்தினருக்கு வேலையிழப்பு ஏற்படுகிறது. அந்த மாமிசத்திலே வேறு யாரின் கை பட்டாலே அந்த குறிப்பிட்ட மதத்தினர் சாப்பிட மாட்டார்கள். நீங்கள் உண்ணும் ஒவ்வொரு பிரியாணியிலும் இந்த வரி அடங்கியிருக்கிறது. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கிலோ கறியிலும் இந்த வரியை நீங்கள் செலுத்துகிறீர்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக வேலைவாய்ப்பிலே தீண்டாமை ஏற்படுவதற்கு நீங்கள் துணை போகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் இறைச்சி கடை வைக்க வேண்டும் என சொல்வதும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தான் சமைக்கவேண்டும் என சொல்வதும் தீண்டாமை தானே?
நாட்டின் சமத்துவத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் எதிரானது இது என்பதை எண்ணி பார்க்க வேண்டாமா? அதற்கு துணை போகலாமா? உணவிலே தீண்டாமையை கடைப் பிடிக்கலாமா? தேவையில்லாத வரி கட்டலாமா? அரசாங்கத்துக்கு வரி கட்ட சொன்னாலே கட்டதாவர்கள் ஏன் இங்கே இப்படி ஒரு சாப்பாட்டு வரி கட்டவேண்டும்? எனவே அசைவ உணவுப் பிரியர்களே இந்த விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய பாரம்பரிய தமிழர் முறைப்படி ஆடுவெட்டுவதை, கோழி அறுப்பதை, ஊக்குவிப்போம்.
தேவையற்ற வீண் செலவினங்களை தவிர்த்திடுவோம். சமத்துவம், சகோதரத்துவம் பேணுவோம். வேலைவாய்ப்பிலே இருக்கும் தீண்டாமையை ஒழித்து எல்லோருக்கும் சமமாக வேலை உரிமை அளிப்போம். நாட்டின் அரசியலமைப்பு உரிமையை பேணுவோம். உடனடி தேவை ஜட்கா முறையில் சமைக்கப்பட்டது என்பதற்கு சர்ட்டிபிகேட் செய்யக்கூடிய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.
ராஜா சங்கர்- சமூக ஆர்வலர்