தமிழகத்தில் ஹிந்துக்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை கோயம்பத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து இந்து முன்னணி தலைவர்களின் வீடுகளும், அதன் முக்கிய நிர்வாகிகள் மீதும் கொலைவெறி தாக்குதலை அடிப்படை பயங்கரவாதிகள் நிகழ்த்தி வருகின்றனர். இந்த படுபாதக செயலுக்கு இந்து முன்னணி நிறுவனர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுவரை நுற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி ஹிந்து பெண்கள் விதவை கோலத்தை ஏற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஹிந்துக்களின் ஒற்றுமையே பலம், பாதுகாப்பு, பிரிந்து இருப்பதே பலவீனம், ஆபத்து, என்பதை ஹிந்து மக்கள் உணர வேண்டும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு.கிஷன்ரெட்டி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும் குற்றவாளிகளை தண்டிக்க உள்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். அவருடன் இளைஞர் அணி அகில பாரத துணைத் தலைவர் திரு.முருகானந்தம் மற்றும் மாவட்ட தலைவர் திரு. நந்தகுமார் மற்றும் பொறுப்பாளர்கள். கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.