Share it if you like it
தமிழக கோவில்களுக்கு என்று தனி வரலாறு உள்ளது. அவற்றில் கல்வெட்டுகள்,ஓலைச்சுவடிகள் இடம்பெற்றுள்ளது. இவை ஹிந்துக்களின் பண்பாடு, வரலாற்று ஆவணங்களாக உள்ளது. தனியார் அறக்கட்டளை சார்பில், 1 லட்சம் ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.இவைகளை கம்பியூட்டரில் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
எனவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் கல்வெட்டுகள்,ஓலைச்சுவடிகளை சேகரித்து ஆவணப்படுத்த வேண்டும்.இவற்றை பாதுகாக்க தனிவாரியம் அமைக்க வேண்டும் என்று தஞ்சாவூரை சேர்ந்த செந்தில்நாதன் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார்.
இதை விசாரித்த நீதிபதி தமிழ் வளர்ச்சி துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது
Share it if you like it