இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் ஹிந்துக்களின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒரு ஹிந்து இறந்தால் அது எங்கோ நடந்தது நமக்கு என்ன கவலை அதே ஒரு சிறுப்பான்மையினர் இறந்தால் அனைத்து கட்சிகள் முதல் அவர்களுக்கு நிதி உதவி செய்வதும், நீதி வேண்டி நாடகம் ஆடுவதும் அதற்க்கு ஏற்றார் போல் அடிமை சேவகம் செய்யும் ஊடகம் மகுடி ஊதுவதை நாம் நன்கு உணரலாம்.
இந்நிலையில் பயங்கரவாதிகளால் ஹிந்துக்கள் தமிழகத்தில் நூற்றுக்கும் மேல் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இருப்பதும், தினமும் ஏதேனும் ஒரு பகுதியில் ஹிந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்று ஹிந்து முன்னணி தென்காசி மாவட்ட செயலாளர் மணிகண்டன் வீடு புகுந்து கடுமையாக தாக்கப்பட்டு இருப்பதும், அதே போல் திருப்பூரில் கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் காருக்கு தீ வைப்பு என தொடர்ந்து ஹிந்துக்களின் சொத்துக்கும், உயிருக்கும் குறிவைக்கப்படுவதே இதற்கு தக்கசாட்சி என்பதே வருத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது.
ஹிந்துக்களின் ஓற்றுமையே பலம், பாதுகாப்பு, பிரிந்து இருப்பதே பலவீனம், ஆபத்து, என்பதை உணர வேண்டும் என ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா- சுப்பிரமணியம் பத்திரிக்கையாளர் மத்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.