ஹிந்து மதத்தை மட்டுமே குறி வைத்து தாக்கும் பிரபலங்கள்!

ஹிந்து மதத்தை மட்டுமே குறி வைத்து தாக்கும் பிரபலங்கள்!

Share it if you like it

ஹிந்துக்களின் ஒற்றுமையே பலம், பாதுகாப்பு, பிரிந்து இருப்பதே பலவீனம், ஆபத்து, என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஹிந்துக்கள், மனம் புண்படும் படி செயல்படும் இயக்கங்கள், கட்சிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள், திரை நட்சத்திரங்கள் என்று ஒரு பட்டாளமே மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு வருகிறது.

பெரியாரில் தொடங்கி அவரின் விழுதுகள் சுப.வீரபாண்டியன், வீரமணி வரை இந்து தெய்வங்களையும், வழிப்பாட்டு முறையைகளையும், எவ்வளவு கீழ்த்தரமாக எழுத முடியுமோ, விமர்சிக்க முடியுமோ, ஏன்? கார்டூன் என்ற பெயரில் இந்து தெய்வங்களை மிக கீழ்த்தரமாக வரைந்து வருவதை இன்று வரை நாம் காண முடிகிறது.

இந்துக்களை புண்படுத்தும் கார்டூன்

சாமான்ய இந்துவின் ஆதங்கம்!

  • ஆண்டாள் தெய்வத்தை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்த வைரமுத்துவை மறந்து விட்டோம்.

  • சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று அவமானப்படுத்திய  நடிகர் கமலை மறந்து விட்டோம்
  • சிவலிங்கத்தை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த சீமானை மறந்து விட்டோம்.;
  • நடிகர் சிவகுமார் ஆலயத்தை பற்றி விமர்சனம் செய்த அவரையும் மறந்துவிட்டோம்
  • தமிழன் பெருமையை இன்று வரை உலம் முழுவதும் பறைச்சாற்றி வரும் தஞ்சை பெரிய கோவிலை பற்றி அண்மையில் நடிகை ஜோதிகா கூறியவற்றை மறந்து விட்டோம்.
  • நடிகர் விஜய் தனது திரைப்படத்தில் கூறியவற்றையும் மறந்து விட்டோம்.
  • தமிழர்கள், கலை, கலாச்சாரம், மொழி, பண்பாடு, மருத்துவம், வழிபாடு, மெல்ல நம் கண்முன்னே அழிக்கும் திட்டத்தை. சில தீய நோக்கம், கொண்டவர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.தொடர்ந்து மறப்போம், மன்னிப்போம், என்று இருந்தால் எதிர்காலத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்து மக்களின் நிலையே ஏற்படும். எனவே ஒற்றுமையாக இருந்து இந்துக்களுக்கு நிகழும் அவலங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

ஆக்கம்- தஞ்சைதாசன்.


Share it if you like it