ஹிந்து விரோத சக்திகளுக்கு எதிராக, களத்தில் இறங்கிய கோவை ஆதீனம்…!

ஹிந்து விரோத சக்திகளுக்கு எதிராக, களத்தில் இறங்கிய கோவை ஆதீனம்…!

Share it if you like it

இந்துதர்மம் தொன்மையையும், மேன்மையும் பொருந்தியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. சிவனுக்கும், திருமாலுக்கும் சமமாக முருக வழிபாடும் தமிழர்களால் தீவிரமாக இன்று வரை பின்பற்றபடுகிறது. மலேசியா, இலங்கை, பர்மா, போன்ற பல நாடுகளில் முருகனின் விக்கிரகத்திற்கு பதிலாக, வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது..

முருகனின் பெருமையை போற்றி புகழ்ந்து பல பெருமக்கள் பாடியுள்ளனர். கந்த சஷ்டி கவசம், தேவராய சுவாமிகளால் இயற்றப்பட்டது.. உடல் உறுப்புகளை இறைவன் காக்கும் பொருட்டு பிரார்த்தனை செய்யும் வகையில் மக்களுக்கு வழங்கி சென்றுள்ளார் அம்மகான்.

அனைவருக்கும் வழிகாட்டியாக திகழும் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுப்படுத்திய கறுப்பர் கூட்டத்துக்கு பதிலடி தரும் வகையில், ஆகஸ்ட் 9ம் தேதி முருக பக்தர்களின்  வீடு வீடாகச் சென்று, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கந்த சஷ்டி கவசம் புத்தகத்தையும், கொரோனாவை தடுக்கும் முகக்கவசத்தையும் மக்களுக்கு வழங்குவோம் என்று கோவை காமாட்சிபுரி ஆதீனம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it