கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரை நூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிக்கும் நிலையை நோக்கி செல்வது ஆரோகியமான விஷயமாகும்.
தீவிரவாதிகளின் கொட்டத்தை ஓடுக்க மேலும் கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஸ்ரீநகர் நவ்ஹடல் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது இரண்டு தீவிரவாதிகள் திடீர் என்று துப்பாகி சூடு நடத்தினர். இரு தரப்பிற்கும் கிட்ட தட்ட 15 மணி நேரம் நீண்ட துப்பாகி சூடு நடைபெற்றது. அதன் பின் 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு கொன்றது.
தீவிரவாதிகள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் ஒருவன் ஹிஸ்புல் முஜாகிதீன் முக்கிய படை தளபதியான ஜூனைத் அஷ்ரப் கான் செஹாரி என்பது தெரிய வந்தது. காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது கல்லூரியும் நடவடிக்கைக்கு இவன் தான் மூளையாக செயல்படுபவன் என்று ராணுவம் கூறியுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
அண்மையில் ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவன் 80% சதவீதத்திற்கும் மேற்பட்ட தமது தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொன்று விட்டது என பாகிஸ்தானில் அலறிய காணொலியை மேஜர் கெளரவ் ஆர்யா வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Chief of Hizbul Mujahideen, Syed Salahuddin says that more than 80 of his top terrorists have been killed in 2020 in Kashmir Valley by Indian Army. Syed Salahuddin lives in Muzzafarabad, PoK. Time to send a team to say hello to him 🌹 pic.twitter.com/lkpzl8cDyU
— Major Gaurav Arya (Retd) (@majorgauravarya) May 9, 2020