மோடி தலைமையில் இந்தியா மாபெரும் வளர்ச்சி: மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கை ரிப்போர்ட்!

மோடி தலைமையில் இந்தியா மாபெரும் வளர்ச்சி: மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கை ரிப்போர்ட்!

Share it if you like it

உலகளவில் வெறும் 10 ஆண்டுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்திருப்தாகவும், கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதால், 10 குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் அமெரிக்காவின் மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று கடந்த 26-ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு (இந்தியா) தலைவர் ரிதம் தேசாய் தலைமையிலான குழுவினர், ‘இந்தியா ஈக்விட்டி ஸ்ட்ரேட்டஜி அன்ட் எக்கனாமிக்ஸ்: 10 ஆண்டுகளில் இந்தியா எப்படி மாற்றம் அடைந்தது’ என்கிற தலைப்பில் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வறிக்கையில்தான், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மாபெரும் வளர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆய்வறிக்கையில், “உலகளவில் வெறும் 10 ஆண்டுகளில் மேக்ரோ எக்னாமி மற்றும் சந்தைக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் முன்னணி பொருளாதார நாடுகள் மத்தியில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டில் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 10 குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான அடிப்படை வரி உலக நாடுகளுக்கு நிகராக மாற்றி அமைக்கப்பட்டது. இது இப்போது 25 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது. இதுவே புதிய நிறுவனங்களுக்கான வரி 15 சதவிகதமாக உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள், பிராட்பேண்ட் இணையதள இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ரயில் பாதை மின்மயம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களில் அதிக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் 12-க்கும் மேற்பட்ட இனங்களில் தனித்தனியாக வரி விதித்து வந்ததை மாற்றி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரிநடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் வரி வருவாய் அதிகரித்திருக்கிறது. யு.பி.ஐ. வழியிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ரொக்க பணப் பரிமாற்றம் குறைந்து, முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரமாக இந்தியா மாறியிருக்கிறது.

ஏழை மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அவர்களது வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு வருவதால் முறைகேடுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, திவால் சட்டம், பணவீக்க கட்டுப்பாடு, அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்தல், ரியல் எஸ்டேட் துறைக்கு தனி சட்டம், பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க கொள்கை அளவில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. வரும் காலத்தில் ஆசியா மற்றும் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். தற்போது, இந்தியாவில் சராசரி தனிநபர் ஆண்டு வருவாய் 2,200 டாலராக உள்ளது. இது 2032-ம் ஆண்டு வாக்கில் 5,200 டாலராக அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில், 2023-ம் நிதியாண்டுக்கான ஜி.டி.பி. தரவுகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டிருக்கிறது. இதில், 2022 – 23-ம் நிதியாண்டின் அக்டோபர் – டிசம்பர் வரையிலான 3-ம் காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி 4.4 சதவிகிதமாக இருந்த நிலையில், ஜனவரி – மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில் வளர்ச்சி 6.1 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, 2022 – 23-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜி.டி.பி. 7.2 சதவிகிதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிது. அதாவது, ரிசர்வ் வங்கி 2022 – 23-ம் நிதியாண்டின் 4-ம் காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி. 5.1 சதவிகிதமாகவும் ஒட்டுமொத்த நிதியாண்டு ஜி.டி.பி. 7 சதவிகிதமாகவும் இருக்கும் என்று மதிப்பிட்டிருந்த நிலையில், ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்ததை விடவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it