குடியுரிமை திருத்தச் சட்டத்தை முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும் – முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் !

குடியுரிமை திருத்தச் சட்டத்தை முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும் – முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் !

Share it if you like it

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை. அதனால் முஸ்லிம்கள் அச்சட்டத்தை எதிர்க்காமல் வரவேற்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ராஸ்வி பரில்வி வலியுறுத்தியுள்ளார். சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் நேற்று (திங்கள் கிழமை) உடனடியாக அமலுக்குவந்த நிலையில் அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. நான் இச்சட்டத்தை வரவேற்கிறேன். இது எப்போதோ அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டியது. தாமதமானாலும் பரவாயில்லை. இப்போதாவது அமலுக்கு வந்ததே என்பதில் மகிழ்ச்சி.

இந்தச் சட்டம் குறித்து இந்திய முஸ்லிம்கள் மத்தியில் நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன. இந்தச் சட்டத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முன்னதாக பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க ஏதுவாக எவ்விதச் சட்டமும் இல்லை. தங்கள் நாட்டில் மதத்தின் பெயரால் நடந்த அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இங்கேயும் குடியுரிமை பெறுவதில் சிக்கல் இருந்தது. இப்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.

பரவலாக சொல்லப்படுவதுபோல் இந்தச் சட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இது எந்த ஒரு முஸ்லிமின் குடியுரிமையையும் பறிக்காது. கடந்த காலங்களில் இச்சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன. அவை புரிதல் இல்லாததால் நடந்தன. சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் அத்தகைய புரிதலற்ற சூழலை விதைத்தனர். உண்மையில் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தச் சட்டத்தை வரவேற்க வேண்டும்,

நம் நாட்டில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் தூண்டி விடப்படுகின்றனர். யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் ஷரத்து இச்சட்டத்தில் இல்லவே இல்லை. சிஏஏ சட்டம் வங்கதேசத்தில், பாகிஸ்தானில் அவதிப்பட்டு வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவே உள்ளது.” என்றார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *