100 குழந்தைகளை காவு வாங்கிய ராஜஸ்தான் அரசு

100 குழந்தைகளை காவு வாங்கிய ராஜஸ்தான் அரசு

Share it if you like it

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கனவே புகாருக்குள்ளான அரசு மருத்துவமனையில் மேலும் 9 குழந்தைகள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

கோடா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஜேகே லான் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் குறித்து மாநில காங்கிரஸ் அரசை பல்வேறுதரப்புக்களும் கடுமையாக விமர்சித்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களில் மேலும் 9 குழந்தைகள் பலியான தகவல் வெளியாகி இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும் 100 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

செவ்வாய்கிழமை எம்பிக்கள் குழு அந்த மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து, உள்கட்டமைப்பு வசதிகள், போதிய செவிலியர்கள் இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையமும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it