10,000 ஆன்மிக சொற்பொழிவுகள்: மனித வாழ்வுக்கான அர்த்தம் இந்து மதம்தான்  – ஜோசப் நெகிழ்ச்சி!

10,000 ஆன்மிக சொற்பொழிவுகள்: மனித வாழ்வுக்கான அர்த்தம் இந்து மதம்தான் – ஜோசப் நெகிழ்ச்சி!

Share it if you like it

ஹிந்துமதம் அர்த்தம் நிறைந்தது கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த ஜோசப் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் ஜோசப் (71). இவர், இளம் வயதில் ஆன்மீக தேடலில் ஈடுபட்டார். தன்னுள் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கு விடையை தேடி அலைந்தார். பல்வேறு மத நூல்களை தேடிப்பிடித்து படித்தார். அதில், ஹிந்து மதத்தின் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக,

இந்து மத கொள்கைகளையும், சிறப்புகளையும் போதிக்கும் வண்ணம் தன்னையே இறை தொண்டில் அர்ப்பணித்து கொண்டார். அந்த வகையில், தமிழகமெங்கும் தற்போது இந்துக்களுக்காக தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகளை வழங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருதத்தில் இலக்கிய பட்டப் படிப்பை முடித்தவர் ஜோசப்.

இதுவரை இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக, 3 ஆயிரம் வேதாந்த குறுந்தகடுகளை வெளியிட்டு, அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

இந்தி, கன்னடம் என இரு மொழிகளிலும் நன்கு புலமை பெற்றவர் ஜோசப். இதனிடையே, இவர் மதுரையில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1991-ல் இவர் எழுதிய ‘கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டியா’ என்ற புத்தகம், ஹிந்து மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து, காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட தமிழகத்தின் பல மடாதிபதிகள் இவரை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டியிருந்தனர்.

இதனை தொடர்ந்து, 12 ஆழ்வார்களை பற்றி இவர் எழுதிய ‘கடவுளை காட்டும் கண்ணாடிகள்’ புத்தகம் இன்றும் மக்களிடையே பேசுப்பொருளாக இருந்து வருகின்றன. மனித வாழ்வுக்கான அர்த்தங்கள் இந்து மதத்தில்தான் உள்ளது. எனவே, நான் திருப்தியடைந்த ஆன்மிகத்தை மக்களிடம் கொண்டு செல்ல எனது மனம் விரும்புகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it