144 தடையை மீறி கேரளாவிலிருந்து உத்தர பிரதேசத்திற்கு சென்ற சப் கலெக்டர் மீது வழக்குப்பதிவு !

144 தடையை மீறி கேரளாவிலிருந்து உத்தர பிரதேசத்திற்கு சென்ற சப் கலெக்டர் மீது வழக்குப்பதிவு !

Share it if you like it

  • நாட்டில் கொரோனா நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும். தற்போது கேரளாவில் 137 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்ட காலத்தில் கேரளா மாநிலம் கொல்லம் சப் கலெக்டர் அனுபம் மிஸ்ரா  வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் அந்த ஐஏஎஸ் அதிகாரி அனுபம் மிஸ்ரா கடந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்ததாகவும், வுஹான் கொரோனா வைரஸின் உலகளாவிய பரவல் காரணமாக அவர் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்த  அதிகாரி தனது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 144 தடையை மீறி சென்றதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு உயர்ந்த அதிகாரியே சட்டத்தை மதிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share it if you like it