Share it if you like it
இன்றைய வானிலை நிலவரத்தின்படி, அடுத்து வருகின்ற நான்கு நாட்களுக்கு, தென்னிந்தியப் பகுதிகளில், மாலை நேரங்களில் இடிமழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
மகராட்டிர மாநிலத்தின் மத்தியப்பகுதிகளில் இருந்து தமிழகம் வரை காற்றுக்குவியல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது. அதாவது அரபிக்கடலில் இருந்து வருகின்ற காற்றும் வங்கக் கடலில் இருந்து வருகின்றா காற்றும் இணைகின்ற ஒரு பகுதி. இதனால் இடிமழை பெய்ய வாய்புள்ளது.
இன்று, 20.4.2023 அன்று மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளிலும், நாளை தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உள்பட, அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை நேர இடிமழை பெய்யக்கூடும். தானிய மூட்டைகளை திறந்த வெளியில் வைப்பதைத் தவிர்க்கவும்.
- முனைவர் கு.வை.பா
Share it if you like it