சரமாரியாக 20 கேள்விகள் : பதில் சொல்லுங்க ஸ்டாலின்  ?

சரமாரியாக 20 கேள்விகள் : பதில் சொல்லுங்க ஸ்டாலின் ?

Share it if you like it

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதி என்ற பெயரில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தேர்தல் முடிந்த உடன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்து விடுகின்றனர் மக்களையும் மறந்து விடுகின்றனர்.வீட்டு எரிவாயு விலையில் ரூபாய்.100 குறைப்பதாக சொன்னீர்களே? ஆனால் வருடங்கள் மூன்றாகியும் இன்னும் குறைக்கவில்லையே, ஏன்? 4. பெட்ரோல் வரி விதிப்பில் ரூபாய்.5 ஐ குறைப்பதாக சொன்னீர்களே? ஆனால் செய்யவில்லையே? ஏன் ? இவ்வாறு 20 கேள்விகளை முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார், பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி.

திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாஜகவின் 20 கேள்விகள்!

பதில்சொல்லுங்கஸ்டாலின்

  1. தி மு க ஆட்சிக்கு வந்ததும் கடந்த அ தி மு க ஆட்சியில் ஊழல் புரிந்த அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என்று வாக்குறுதி அளித்தீர்களே? ஊழல் நடக்கவில்லையா? அல்லது வழக்கம் போல் ஊழல்வாதிகளுடன் கை கோர்த்து விட்டீர்களா?
  2. வீட்டு எரிவாயு விலையில் ரூபாய்.100 குறைப்பதாக சொன்னீர்களே? ஆனால் வருடங்கள் மூன்றாகியும் இன்னும் குறைக்கவில்லையே, ஏன்?

3.ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்தீர்களே? 50 லட்சம் கையெழுத்து வாங்கியதாக சொல்லியும் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லையே? பொய் தானே சொன்னீர்கள்?

  1. பெட்ரோல் வரி விதிப்பில் ரூபாய்.5 ஐ குறைப்பதாக சொன்னீர்களே? ஆனால் செய்யவில்லையே? மக்கள் ஏமாளிகள் என்ற எண்ணம் தானே?

5.தி மு க ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்களே? ஆனால், இன்று வரை செய்யவில்லையே? ஏன்? மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலை இல்லாதது தானே காரணம்?

  1. தி மு க ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து மது விற்பனையை குறைத்து தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதாக வாக்குறுதி அளித்தீர்களே? ஆனால், மது குடிப்பவர்களும், மது விற்பனையும், மது போதையால் நடைபெறும் கொலைகளும் அதிகமாக பெருகியுள்ளதே? பொய் தானே சொன்னீர்கள்?
  2. உலகெங்கிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க முயற்சி எடுக்கப்படும் என்று சொன்னீர்களே? இது வரை எத்துனை இருக்கைகள் அமைக்கப்பட்டன? எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? தமிழ் மீது உங்களுக்கு ஏன் இந்த வஞ்சனை?
  3. உலகப் புகழ்பெற்ற பிறமொழி நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிட்டு வெளியிடப்படும். இதைப் போலவே மிகச்சிறந்த தமிழ் நூல்கள் உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு தமிழ் , தமிழர்களின் பெருமை உலக அளவில் பெருகிப் பரவிட அச்சு மற்றும் இணையதள வசதிகளைப் பயன்படுத்தி ஆவன செய்யப்படும் என்று கூறினீர்களே? இந்த மூன்று வருடங்களில் எத்தனை நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன? வெளியிடப்பட்டன? அச்சிடப்பட்டன? தமிழை மொழியை தாங்கள் புறக்கணிக்க காரணம் என்ன?
  4. தனி நிலத்தில் பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்குவதற்கு உரிய காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினீர்களே? ஏன் கொண்டு வரவில்லை? விவசாயிகளை ஏமாற்றுவது நியாயமா?
  5. அதிகமாக மின்கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் பொருட்டு மின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று உறுதி கூறினீர்களே? மூன்று வருடங்களாகியும் அதை அமல்படுத்த மறுப்பது ஏன்?
  6. செய்யூர் அனல்மின் நிலைய திட்டத்தில் உள்ள சிக்கல்களை அகற்றி, மீண்டும் உடனடியாக செயல்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றீர்களே? ஆனால், அதற்கு நிரந்தரமாக மூடு விழா நடத்தி விட்டீர்களே? ஏன்? அதில் மிக பெரிய முறைகேடு நடந்திருப்பதாக சொல்லப்படுகிறதே? நியாயமா? இது நியாயமா?
  7. சென்னை மாநகரில் ஓடுகின்ற ஆறுகளான அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய், மாம்பலம் கால்வாய், காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, விராங்கல் ஓடை ஆகிய ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நீரோட்டம் அதிகரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னீர்களே? ஆனால், குப்பைகள், கழிவுகள் அனைத்திற்குமான இடமாக இதே ஆறுகள் மாறிவிட்ட அவலம் உங்களுக்கு தெரியுமா மு.க.ஸ்டாலின் அவர்களே?
  8. டில்லியில் இயக்கப்படுவது போல் (CNG) எரிவாயுவின் இயங்கும் பேருந்துகள் இனி தமிழகத்தில் இயக்கப்படும் என்றீர்களே? ஆனால், சமீபத்தில் கூட டீசல் பேருந்துகளை தானே கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளீர்களே, ஏன்?
  9. தமிழக சட்ட பேரவை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று சொன்னீர்களே? ஆனால் இன்று வரை செய்யவிலையையே ஏன்?
  10. சென்னை மெட்ரோ ரயிலில் மாணவர்களுக்கு கட்டண சலுகை என அறிவித்தீர்களே? நினைவில் உள்ளதா?
  11. பால் விலையை குறைப்பதாக சொல்லி விட்டு அளவை குறைத்து, எண்ணிக்கையை குறைத்து தட்டுப்பாட்டை உருவாக்கியது தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக தானே?
  12. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக சொன்னீர்களே? மூன்று வருடங்களில் 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது அரசின் நிர்வாகமின்மையால் தானே?
  13. சமூக நீதி காக்கும் திராவிட மாடல் என்று மார் தட்டி கொள்கிறீர்களே? ஆனால், இரு வருடங்களாகியும் இது வரை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தவர்களை கண்டுபிடிக்காது சமூக அநீதியை இழைத்துள்ளீர்களே?
  14. குட்கா விவகாரத்தில் பெரும் குரல் கொடுத்தீர்களே? குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினீர்களே? ஆனால், தமிழகம் முழுவதும் போதை பொருள் விற்பனை கொடி கட்டி பரப்பதை உங்களால் தடுக்க முடியவில்லையே?
  15. தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கவில்லை என்று சதா சர்வகாலமும் சாடுகிறீர்களே? நம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு கடந்த மூன்று ஆண்டு காலம் திராவிட மாடல் அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதை பட்டியலிட்டு வெள்ளை அறிக்கை விட முடியுமா?

பதில் சொல்லுங்க ஸ்டாலின் ?


Share it if you like it