செப்டம்பர் 29 2008 அன்று மஹாராஷ்ட்ரா மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சி ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்கு மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் நிகழ்ந்த பிறகு, இவர் மஹாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள். அப்போது அவரை மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளார்கள். யோகி ஆதித்யநாத், இந்திரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு பாஜக, ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகளுக்கு குண்டு வெடிப்பில் பங்கிருப்பதாக பொய் சாட்சி சொல்ல வற்புறுத்தியுள்ளார்கள். அப்போது மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும் ஆட்சி செய்த காங்கிரஸ், இதை ஹிந்து தீவிரவாதமாக காட்ட மேற்கொண்ட முயற்சி மீண்டும் அம்பலமாகியுள்ளது.