கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தற்பொழுது ஜம்மூ-காஷ்மீர் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
TikTok-டை அண்மையில் இந்தியா அதிரடியாக தடை செய்து இருந்தது. ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்..
ஜம்மூ-பிரச்சினை தீர்ந்துவிட்டது. லடாக்கில் சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை காலி செய்வதை TikTok இப்போது உறுதி செய்யும் என்று கூறியுள்ளார். ஒரு முன்னாள் முதல்வர் சீனாவிற்கு இப்படி பகிரங்கமாக ஆதரவு வழங்கியது வெட்ககேடான செயல் என்று பலர் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில்.
உமர் அப்துல்லாவின் தந்தையும் முன்னாள் முதல்வரும். காங்கிரஸ் ஆட்சியில் பல முக்கிய பொறுப்புக்களை வகித்தவருமான பரூக் அப்துல்லா தனது வன்மம் நிறைந்த கருத்தை பின்வருமாறு கூறியுள்ளார்.
சீனாவின் துணையுடன் 370-வது சட்டத்தை இந்தியாவில் இருந்து ரத்து செய்வோம் என்று அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தை ஒரு குடும்பத்தின் வாரிசுகள் எப்படி சின்னா பின்னமாக்கியதோ அதே போல ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில் கோர தாண்டவம் ஆடியவர்கள் பரூக் அப்துல்லாவின் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.