சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் விஜயபாரதம் பிரசுரத்தின் ஸ்டால் நம்பர் F49 என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் காலத்தில், டிசம்பர் கடைசி வாரத்திலிருந்து ஜனவரி 3-வது வாரத்திற்குள் நடத்தப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் ஏராளமான பிரசுரங்களின் புத்தகங்கள் இடம்பெறும். அதேபோல, குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகங்கள் முதல் வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரைகள் வரையிலான அனைத்து புத்தகங்களும் கிடைக்கும்.
அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான சென்னை புத்தக கண்காட்சி (46-வது புத்தக கண்காட்சி) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 22-ம் தேதி வரை 18 நாட்கள் இக்கண்காட்சி நடக்கிறது. இப்புத்தக கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல் முறையாக இப்புத்தக கண்காட்சியில் 1,000 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, முதல்முறையாக இந்த புத்தக கண்காட்சியில் திருநங்கையரின் படைப்புகளும் இடம்பெறுகின்றன.
வார நாட்களில் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தக கண்காட்சி நடைபெறும். இப்புத்தக கண்காட்சியில் விஜயபாரதம் பிரசுரத்திற்கு ஸ்டால் நம்பர் F49 ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு விஜயபாரதம் பிரசுரத்தின் அத்தனை புத்தகங்களும் கிடைக்கும். குறிப்பாக, விஜயபாரதம் பிரசுரத்தின் புதிய நூல்களும் இக்கண்காட்சியில் இடம்பெறுகிறது. ஆகவே, பார்வையாளர்கள் தங்களுக்குத் தேவையான விஜயபாரதம் பிரசுத்தின் புத்தகங்களை வாங்கி பயனடையலாம்.