அடேங்கப்பா… 500 கோடியில் கல்லூரி?

அடேங்கப்பா… 500 கோடியில் கல்லூரி?

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகைக்கு வெளிநாட்டில் 500 கோடி மதிப்பில் கல்லூரி உள்ளதாக ஜெ. நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை தலைவராக இருப்பவர் செல்வப் பெருந்தகை. இவர், குறித்த திடுக்கிடும் தகவல்களை கடிதம் மூலமாக அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஜெ. நியூஸிற்கு அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது; ரிசர்வ் வங்கியில் பியூனாக வேலை பார்த்தவர். லண்டனின் கல்லூரி நடத்தும் அளவிற்கு இன்று அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். சட்டத்தை ஏமாற்றியவர், ஊரை ஏய்ப்பவர், உத்தமன் போல காங்கிரஸ் கட்சியில் உலவி கொண்டு இருக்கும் கிரிமினல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதவிர, பல ஆண்டுகளுக்கு முன்பு ஆடிட்டர் ஒருவரை கொலை செய்து 60 கோடி ரூபாயை அள்ளி சென்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளிடமிருந்து பெற்ற பணத்தை காப்பாற்ற லண்டனில் உள்ள மெக்கனாஸ் கோல்ட் பட நிறுவனத்தின் சொத்துக்களை 500 கோடிக்கு வாங்கியுள்ளார். மேலும், அங்கேயே பக்கிங்காம் காலேஜ் ஆப் லண்டன் என்ற பெயரில் கல்லூரியை துவக்கியுள்ளார். அக்கல்லூரியின் இயக்குனராக தனது மனைவி உமையாளை நியமித்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்கள் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகம், கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் பெற்று 2,000 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்று பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் கடந்த ஆண்டு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார். திருமாவளவன் கட்சியில் இருந்து விலகிய செல்வ பெருந்தகையிடம் 500 கோடி என்றால் வன்னியரசிடம் எவ்வளவு தொகை இருக்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it