சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 500 சுற்றுலாப் பயணிகள் – பத்திரமாக மீட்ட இந்திய இராணுவம் !

சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 500 சுற்றுலாப் பயணிகள் – பத்திரமாக மீட்ட இந்திய இராணுவம் !

Share it if you like it

இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா தலங்களும் அடங்கிய மாநிலமாக சிக்கிம் உள்ளது. காங்டாக் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில், தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இப்பகுதியில், வீடுகள், சாலைகள், வாகனங்கள் என அனைத்தையும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது. கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதனிடையே, பனிப்பொழிவை பார்த்து ரசிப்பதற்காக 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காங்டாக் சென்றுள்ளனர். அவர்கள் 175 வாகனங்களில் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு திடீரென கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. நேரம் செல்லசெல்ல பனிப்பொழிவு அதிகரித்து கொண்டே இருந்ததால், சுற்றுலா பயணிகள் செய்வதறியாது தவித்து நின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற இந்திய இராணுவ வீரர்கள், சுற்றுலா பயணிகளுக்கு உடனடி மருத்துவ உதவிகளை செய்தனர். மேலும், உணவு மற்றும் குளிர்பானம் வழங்கினர். பின்னர், சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து சென்று வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.


Share it if you like it