ரூ.19,000 கோடியில், 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் !

ரூ.19,000 கோடியில், 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் !

Share it if you like it

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கடற்படைக்காக ரூ.19,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இடையே மார்ச் முதல் வாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்திய கடற்படை போர்க்கப்பல்களில் ஏற்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய ஆயுதமாக கருதப்படுகிறது.

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் சூப்பர் சானிக் ஏவுகணைகளை தயாரிக்க 1998 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தன. இதன்படி இரு நாடுகளும் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கின.

இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படுகிறது. இதன் உற்பத்தி ஆலை ஹைதராபாத்தில் உள்ளது. உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது.

இந்திய, ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக கடந்த 2001-ம் ஆண்டில் ஒடிசாவில் சோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு நீர், நிலம், வான் பரப்பில் இருந்து ஏவும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு முப்படையிலும் சேர்க்கப்பட்டன.

பிரம்மோஸ் ஏவுகணை பிரம்மோஸ் கார்ப்பரேஷன் மூலம் பெரிய அளவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது மேலும் பல பாகங்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பல்வேறு நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.


Share it if you like it