திராவிட ஆட்சியில் ஹிந்து ஆலயங்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு என்பது தற்பொழுது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என்பது மிகவும் கசப்பான உண்மை. திருநெல்வேலியில் உள்ள புகழ் பெற்ற பெருமாள் கோவிலின் 120 ஏக்கர் நிலத்தை சில சமூக விரோத கும்பல்கள் அண்மையில் அபகரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ஏக்கர் கோவில் நிலத்தை சில சமூக விரோத கும்பல்கள் அபகரிக்க முயல்வதாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சொத்து மட்டும் நியாயமான முறையில் அளந்து பறிமுதல் செய்யப்பட்டால் 60 ஆயிரம் கோடி சொத்துக்கள் ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளைக்கு வந்து சேரும்.. அபகரிக்க முயற்சி செய்த குழுக்கள் தலை தெறித்து ஓடும்.. பல ஆடம்பர கட்டடங்கள் தரைமட்டமாகும்.. @CMOTamilNadu தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் pic.twitter.com/2hH3uZjhIb
— Mohan G Kshatriyan (@mohandreamer) September 30, 2020