80 லட்சம் வீடு… ரூ.40,000 கோடி: அசத்தல் பட்ஜெட்!

80 லட்சம் வீடு… ரூ.40,000 கோடி: அசத்தல் பட்ஜெட்!

Share it if you like it

பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 40,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், 2023-ம் ஆண்டுக்குள் 80 லட்சம் வீடுகள் குறைந்த விலையில் கட்டித் தரப்படும் என்றும் பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டிருப்பது ஏழை, எளிய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஏழை, எளிய மக்களின் மிகப்பெரிய வாழ்நாள் கனவுகளில் ஒன்று சொந்த வீடு கட்டுவது. இன்றைய காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில்தான், 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாரத பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில், சுவட்ச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டும் திட்டத்தை அறிவித்தார். தொடர்ந்து, ஆவாஸ் யோஜனா எனப்படும் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தை அறிவித்தார். இதன் பிறகு, ஜல்சக்தி எனப்படும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில்தான், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கூடுதலாக 80 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு, மேலும் 40,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் பால் வார்த்தது போல் அமைந்திருக்கிறது. மேலும், அனைத்து தரப்பு மக்களிடையே இத்திட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைப்பினர் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it