Share it if you like it
- இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் கொரோனா நிவாரண நிதி குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துகள் பதிவிடப்பட்டது. இந்த பதிவை கர்நாடகா நபர் ஒருவர் கர்நாடகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுதுது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது ஐசிபி பிரிவு 505 (1) பி153 பிரிவு ஆகியவற்றின் கீழ் மக்களைத் தூண்டிவிடுதல், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராகக் குற்றம் இழைக்கத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவகுமார், முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அடிப்படை ஆதாரமற்ற அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சிவமோகா போலீசார் வழக்குப்பதிவு செய்தது அடிப்படை ஆதாரமற்றது. எனவே அந்த வழக்கை பதிவு செய்த போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
A BJP activist has filed a complaint against Smt.Sonia Gandhi with a political motive based on false information.
Have written to CM @BSYBJP demanding withdrawal of the FIR
I also urge him to register a FIR against the police officer for misusing process of law & to suspend him pic.twitter.com/oWpqyFVI4Y
— DK Shivakumar (@DKShivakumar) May 21, 2020
- இதற்கு பாஜக எம்.பி. ஷோபா கரந்தலாஜே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். அதில்,பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்காக கடினமாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். அவர் கொரோனா தொற்று நோயை விரட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார். இதற்காக உலக நாடுகள் அனைத்தும் பிரதமரை பாராட்டி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி பற்றி அவதூறான கருத்தை பதிவு செய்த காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், ட்விட்டர் பக்கத்தில் உள்ள கருத்தை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Share it if you like it