சீனா எல்லை ஒப்பந்தங்களை மீறி இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது. சீனாவிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய சில ஊடகங்கள், பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள், மோடி அரசிற்கு எதிரான செயலையே இன்று வரை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவுடனான எல்லை நிலைமை குறித்து, அரசாங்கத்தின் மெளனம் நெருக்கடியான நேரத்தில், மிக பெரிய ஊகங்களையும், நிச்சயமற்ற தன்மையையும் தூண்டுகிறது. என்ன நடக்கிறது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா ராகுலுக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
1962 ஆம் ஆண்டில் நேருவின் கோழைத்தனம் மற்றும் கம்யூனிச பாதுகாப்பு மந்திரி கிருஷ்ணா மேனன் ஆகியோரால் 40000 சதுர மீட்டர் பரப்பளவை சீனாவிடம் இழந்தோம். அங்கு ஒரு புல் கத்தி கூட வளராது என்று நேரு நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருந்தார். காங்கிரஸ் பிரதமரின் தரப்பில் என்ன ஒரு வெட்கக்கேடான செயல்.
சமீபத்தில் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இது ஒன்றும் 1962 அல்ல இங்கு மோடி ஆட்சி நடக்கிறது என்று வெளிப்படையாக கூறாமல் மிக கடுமையாக சீனாவை விமர்சனம் செய்து இருந்தார். அந்த முன்னாள் ராணுவ கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
In 1962 because of the cowardice of Nehru and the communist defence minister Krishna Menon we lost 40000 sqkm of our territory to China. Nehru had gone on record in parliament that not even a blade of grass would grow there. What a shameful act on the part of Congress PM. https://t.co/oiyvoU8pcu
— H Raja (@HRajaBJP) May 31, 2020