மத்திய அரசு அண்மையில் 10% இட ஒதுக்கீட்டை பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினரின் நலனை முன்னிட்டு கொண்டு வந்தது. நாடு முழுவதும் இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல தரப்பு மக்களும் இதற்கு தங்களின் முழு ஆதரவை வழங்கியுள்ளனர்.
தாசில்தாரிடம் தனது ஆண்டு வருமானம் மற்றும் இன்ன பிற விவரங்களை வழங்கி சான்றிதழ் பெற்றால் மட்டுமே பள்ளிகள், கல்லூரிகள், வேலை வாய்ப்புகளில் சலுகைகளை பெற முடியும். ஆனால் இதற்கு தமிழக அரசு தாசில்தார் மூலம் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வத்தமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு மட்டுமில்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்பது, அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலமாக செய்யப்பட்டுள்ள ஒரு விஷயம். வெறுமனே ஒரு Executive instruction மூலமாக அந்த பலனை உரியவர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வது மிகப்பெரிய தவறு . இது Doctrine of colorable Legislation ஆகும். அதாவது தாசில்தார் income and asset certificate வழங்குவது தடுக்கப்பட்டால் , அதன் நியாமான பயனாளிகள் , 10% reservation ஐ பெறவே முடியாது. இதை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது