கொரோனா தொற்றில் உலகமே ரத்த கண்ணீர் வடித்து வரும் சூழ்நிலையில். இந்தியா வல்லரசு நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்தது. மனிதாபிமானம் உள்ள நாடு இந்தியா, இக்கட்டான சூழ்நிலையில் உலகின் மருந்தகமாக திகழ்ந்தது என்று பல்வேறு நாடுகள் இந்தியாவை புகழ்ந்தது.
அண்மையில் லண்டனில் நடைபெற்ற இந்தியா குளோபல் வீக் உச்சி மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பின்வருமாறு கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உலகத்தை மீட்டு எடுக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். இந்தியாவிடம் இருந்து பேராசை தன்மை இல்லாத பண்டைய யோக ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்தியாவின் தத்துவமும், மதிப்புகளும் நிலையான எதிர்காலத்தை வலியுத்துகிறது. இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொண்டேன் என்று சார்லஸ் கூறியுள்ளார்.