திமுகாவின் கறுப்பர் கூட்டம் தமிழ் கடவுள் முருகன் மீது நிகழ்த்திய தாக்குதலை யாரும் அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது. தமிழர்களுக்கு திராவிடம் போட்ட பிச்சை என்று கூறிய ஆர்.எஸ் பாரதி அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது பின்வருமாறு கூறியுள்ளார்.
கறுப்பர் கூட்டத்திற்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. திமுகாவில் 1 கோடிக்கும் மேல் ஹிந்துக்கள் உள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரைத் தேர்தல் வரவுள்ள நேரத்தில் திட்டமிட்டு சிலர் திமுகவுக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டே திமுக அலறி அடித்துக் கொண்டு ஆர்.எஸ் பாரதி மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளது. துளியும் ஹிந்துக்களின் உணர்வுகளை மதிக்கும் நோக்கில் திமுகவின் அறிக்கை இல்லை என்பதை ஹிந்துக்கள் உணர்ந்து கொண்டனர்.
சாமாயன் எழுப்பிய கேள்விகள்…
- ஹிந்து திருமண சடங்குகள் ஆபாசமானவை -ஸ்டாலின்
- திருப்பதி பெருமாளுக்கு சக்தி இல்லையா – கனிமொழி
- ஆண்டாளை கீழ்த்தரமாக விமர்சித்த – வைரமுத்து
- ஹிந்துக்கள் என்றால் திருடன் – கலைஞர்
ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூறமாட்டோம். ஹிந்துக்களின் ஓட்டுக்கள் வேண்டாம் என்று கூறமாட்டோம். ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்துவோம். ஆனால் நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரி இல்லை என்ன மாதிரியான பித்தலாட்டம் இது என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
நேற்று சுப.வீரபாண்டியன் இன்று திமுக கறுப்பர் கூட்டத்தை கை கழுவி உள்ளது. திமுகாவின் பதவி ஆசைக்கு யாரையும் இழக்க ஸ்டாலின் கூட்டம் தயார் என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும் என்று பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துக்களின் ஒற்றுமை ஓங்கினால் திமுக புறங்காட்டி ஓடும்!