அரசர் கோவில் என்னும் கிராம் படாளம் பக்கத்தில் பிலிப்பரன் கோவில் அருகே உள்ளது. அங்கு மிகவும் தொன்மை வாய்ந்த வெங்கடேஸ்வரா பிரசன்ன கோயில் உள்ளது. திடீர் என்று அக்கோவிலுக்குள் மதுபோதையில் இருந்த மூன்று ஆசாமிகள் நுழைய முயன்றுள்ளனர். அவர்களின் நிலையை உணர்ந்த கோவில் அர்ச்சகர் நீங்கள் உள்ளே வர அனுமதி இல்லை என்று தடுத்துள்ளார்.
கோவில் அர்ச்சகரை தள்ளி விட்டு கருவறை முதற்கொண்டு அனைத்தையும் கேமராவில் புகைப்படம் எடுத்தனர். கோவில் அர்ச்சகர் தனது கடும் எதிர்ப்பை தெரிவிக்கவே. அவரின் முகத்தில் குத்தி, பூணுலை அறுத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற பக்தரையும், சத்தம் கேட்டு ஒடி வந்த கோவில் பணியாளரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
நான் நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்வேன் எங்களை கேட்க யாரும் இல்லை என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர் மூன்று போதை ஆசாமிகள். இதனை அடுத்து கோவில் அர்ச்சகர் காயம் அடைந்த நபர்களுடன் இணைந்து படாளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றுள்ளார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் அவர்களின் புகார் மனுவை பெற்று கொள்ள மறுத்துள்ளனர்.
தாக்குதல் நிகழ்த்திய மூவரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு மட்டுமில்லாமல் திமுகவின் முக்கிய புள்ளிகள் என்று தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அர்ச்சகர் பாஜக நிர்வாகிகளின் துணையுடன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். ஆட்சியில் இல்லாத பொழுதே இவ்வளவு அட்டூழியம், அடாவடி, என்றால் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலை என்னவென்பது மில்லியன் டாலர் கேள்வி..
முருகனை இழிவுப்படுத்திய திமுகவின் கறுப்பர் கூட்டத்தை உடனே கண்டிக்காமல் ஈயம் பூசியது போல் அறிக்கை வெளியிட்டது மட்டுமில்லாமல் எம்மதமும் சம்மதம் என்று கருத்து கூறியுள்ளார் ஒத்தையில் நிற்கும் வேங்கை மகன் திரு. ரஜினிகாந்த். இதற்கு என்ன பதில் கூறுவார் என்பது அவருக்கு தான் வெளிச்சம் என்று மக்களின் கருத்தாக உள்ளது. தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் ஹிந்துக்கள் மீதும் ஆலயங்கள் மீதும் மாற்று மதத்தினர் நிகழ்த்தும் தாக்குதல் இன்று வரை தொடர்ந்த வண்ணமாக உள்ளது என்பது கசப்பான உண்மை.