சமூகத்தில் மக்களிடையே நிலவும் ஏற்ற, தாழ்வுகளை, நீக்கும் பொருட்டு ஹிந்து மதத்தில் பல மகான்கள், ஞானிகள், நல் போதனைகளை மக்களுக்கு வழங்கியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத், போன்ற அமைப்புக்களும் மேற்கூறிய மகான்களின் வழியில் இன்று வரை பயணித்து கொண்டு வருகிறது.
சமுதாயத்தில் ஜாதி பாகுபாடு, மற்றும் தீண்டாமையினை ஒழிக்கும் பொருட்டு விருப்பமுள்ள 5,000 பட்டியல் இன மக்களுக்கு கோவில் பூசாரியாக பயிற்சி அளித்துள்ளோம். என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
பூசாரிகளாக பயிற்சி பெறும் நபர்கள் அரசாங்கத்தின். கட்டுப்பாட்டில் உள்ள ஆலய பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுவர். தென் மாநிலங்களில் ஏராளமான பட்டியல் சமூகத்தினர் பூஜாரிகளாக உள்ளனர். வி.எச்.பி.யின் முயற்சியால் தமிழகத்தில் மட்டும் 2,500 நபர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ஆந்திராவிலும் 5,000 நபர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். பட்டியல் சமூகத்தினருக்கு பயிற்சியளிப்பதில் வி.எச்.பி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
வி.எச்.பி.யின் இரண்டு பிரிவுகள் இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளன, மத விஷயங்களில் ஆர்வமுள்ள நபர்களுக்கு வெவ்வேறு மத சடங்குகளை நடத்துவதற்கான பயிற்சியை வழங்குகிறோம். பயிற்சியின் முடிவில் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தெற்கில் பயிலும் மாணவர்களுக்கு ஆந்திராவைச் சேர்ந்த திருப்பதி பாலாஜி கோயில் சான்றிதழ்களை வழங்குகிறது என்று பன்சால் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.