பிரபல ஜெர்மனி எழுத்தாளர் மரியா விர்த் அண்மையில் பாரதப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.
அன்புள்ள மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி’
நான் ஒரு இந்திய குடிமகள் அல்ல, ஆனால் இந்தியாவை மிகவும் விரும்புகிறேன். அவளின் கலாச்சாரம் என்றும், செழித்து பரவ வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் இது மனித இனத்திற்கே மிகவும் நன்மை அளிக்கும் என்பது உறுதி. இந்தியாவை தவிர, அனைத்து பண்டைய கலாச்சாரங்கள் கிறிஸ்தவம், இஸ்லாம், அல்லது சில நேரங்களில் கம்யூனிசத்தால் கடுமையான அழிவுகளை சந்தித்துள்ளன.
அல்லாஹ் பூமியில் முஸ்லிம்களை மட்டுமே விரும்புகிறான், எனவே அவர்கள் ஜிஹாத் செய்ய வேண்டும், மேலும் அவர்கள் சொர்க்கத்தில் உயர் பதவியைப் பெறுவார்கள் (குர்ஆன் 4.95) என்று கூறுகிறது. திருச்சபை இனிமேல் கொல்லக்கூடாது (அது முன்பு செய்தது), ஆனால் ஹீத்தனை தாழ்ந்தவனாகக் அது கருதுகிறது. இயேசுவைக் ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்துக்கள் நரகத்திலிருந்து காப்பாற்ற முடியாது என்று திருச்சபை தொடர்ந்து கூறிவருகிறது.
இந்தியா கடைசி பண்டைய கலாச்சாரம், ஆனால் அந்த மூன்று சக்திகளின் கொடுர தாக்குதலுக்கு தொடர்ந்து இந்தியா உள்ளாகிறது. இந்த பாகுபாட்டை போக்க இது குறித்து ஐ.நா.விடம் மனு செய்ய வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் மரியா விர்த்..!
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் தனது கருத்தினை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஹிந்து மக்களை வெளிப்படையாகவே மத மாற்றம் செய்கின்றனர். ஆனால் மதம் மாறி போனவர்களை மீண்டும் தாய் மதம் திரும்பி அழைத்து வர ஹிந்துக்கள் ஏன்? கூச்சப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Muslims and Christians openly try to convert Hindus.
Why are Hindus shy to encourage the converts to reflect and come back?
— Maria Wirth (@mariawirth1) August 27, 2020