சீனாவின் அடாவடித்தனத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. டிக் டாக் உட்பட பல சீன செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்திருந்தது. சீனாவிற் எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு விரைவுப்படுத்தி வருகிறது. நேற்றைய தினம் பப்ஜீ உட்பட 118-சீன செயலிகளுக்கு இந்தியா அதிரடியாக தடை விதித்திருந்தது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு திருநெல்வேலி மாநகர துணை போலீஸ் கமிஷனர். அர்ஜுன் சரவணன் அவர்கள் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டு செயலி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. வன்முறையை வளர்க்கும் செயலி தடை செய்யப்பட்டிருப்பது தொடக்கமாக இருக்கட்டும். ஆன்லைன் ரம்மியும் விரைவில் தடை செய்யப் படும் என நம்புகிறேன்.#pubgban #pubgbanindia pic.twitter.com/uWqAAXKnvI
— Arjun Saravanan (@ArjunSaravanan5) September 2, 2020