இந்தியாவை நாம் ஏன் சீண்டினோம் என்று சீனா தற்பொழுது நன்கு உணர துவங்கியுள்ளது. காங்கிரஸ் அரசு போல் பணிந்து போகாமல். மோடி அரசு இந்திய ராணுவ வீரர்களின் முழு வீரத்தையும் சீனாவிற்கு எதிராக இன்று வரை காட்டி வருகிறது. சீனாவை ஒட ஒட இந்தியா விரட்டி வருகிறது என்பது சர்வதேச வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ஆகஸ்ட் 29-30 இரவு, பாங்காங்-திசோ ஏரிக்கு தெற்கே இந்திய இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை மூலம். இந்தியா சிறப்பான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது. ‘1962 போருக்குப் பிறகு முதல் முறையாக இந்தியா, கைலாஷ் மலை பகுதியின் சில முக்கிய இடங்களை இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். கைலாஷ் மலைத்தொடர் (கைலாஷ் மான்சரோவர்) இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் புனிதமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து கைலாஷ் மன்சரோவர் ஏரிக்கு மிக அருகில் லடாக் வழியாக இந்த பாதை செல்கிறது.
பாங்கோங்-திசோ ஏரிக்கு தெற்கே சுமார் 60-70 கி.மீ பரப்பளவில் உள்ள நிலத்தை இந்திய இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. ரெச்சின்-லா பாஸ் அனைத்தும் கைலாஷ் வரம்பின் ஒரு பகுதியாகும். 1962 போருக்கு முன்பு, இந்த பகுதி முழுவதும் இந்தியாவின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1304801574103916544