Share it if you like it
தலைநகர் டெல்லியானது நரகத்தைவிட மோசமாகிவருகிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை விசாரணை நடத்திய அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் அரசுகளுக்கு எதிராக சரமாரியான கேள்விகளை கேட்டனர். விவசாயிகள் கழிவுகளை எரிப்பதை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை? பொதுமக்களை நீங்கள் மோசமாக நடத்துகிறீர்கள், அவர்களை சாகடித்துக்கொண்டிருக்கிறீகள் என அரசுகளை குற்றஞ்சாட்டினர். மேலும் நீதிபதிகள் கூறியதாவது அனைவருக்கும் வாழ உரிமையுள்ளது, ஆனால் நாம் பூமியை வாழ தகுதியற்ற பகுதியாக மாற்றிவருகிறோம் என வேதனை தெரிவித்தனர்.
Share it if you like it