Share it if you like it
கூகுள் பிளேஸ்டோரில் இடம் பெற்றுள்ள கட்டணம் வசூலிக்கும் ஆப்களான பேடிஎம், போன்பே, போன்ற ஆப்கள் பரிவர்த்தனையின் 30 சதவீதத்தை கமிஷனாக தர வேண்டும் என்ற கூகுளின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சனியன்று நடத்திய கூட்டத்தில் கூகுளின் ஏகபோக கொள்ளைக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி பேடிஎம், இந்தியா மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களை ஒருங்கிணைந்து புதிய அமைப்பினை உருவாக்கும் திட்டத்தில் உள்ளன.
Share it if you like it