பொதுமக்களை தொடர்ந்து போலீஸ் மீதே கைவைத்த திமுக…

பொதுமக்களை தொடர்ந்து போலீஸ் மீதே கைவைத்த திமுக…

Share it if you like it

சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் சுரங்கபாதை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இளைஞர்கள் சிலர் 4ம் தேதி இரவு போக்குவரத்திற்கு இடையூறு செய்யும்விதமாக அமர்ந்து மது அருந்திக் அமர்களம் செய்துள்ளனர்.
இதனை அவ்வழியே வந்த ஆதம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் ஹாரன் அடித்து நகரும் படி கூறியுள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த இளைஞர்கள் பீர்பாட்டிலால் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தின் சாவி, செல்போன் ஆகியவற்றை பிடுங்கி சென்றுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தி உதவி ஆய்வாளரை தாக்கியது ஆலந்தூரை சேர்ந்த திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத், அஜித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களையும் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Share it if you like it