வைட்டமின் குறை தீர்க்கும் செயலி!

வைட்டமின் குறை தீர்க்கும் செயலி!

Share it if you like it

ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த அஜ்மான் பல்கலைக்கழக மாணவர்கள், வைட்டமின் சத்து குறைபாடுகளை எளிதில் கண்டுபிடிக்க, ‘வைட்டா-கேம்’ என்ற மொபைல் செயலியை வடிவமைத்து உள்ளனர்.
வழக்கமான திறன் பேசிகளில் வைட்டா-கேம் (Vita-Cam) செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
மொபைல் கேமரா மூலம் ஒருவர் தன் கண்கள், நாக்கு, உதடுகள், நகங்கள் ஆகியவற்றை படம் எடுத்து, இந்த செயலியிடம் தந்துவிட்டால் போதும், வைட்டா-கேம் செயலியின் பின்னாலிருந்து இயங்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள், பல்லாயிரக் கணக்கான வைட்டமின் குறைபாடால் வரும் அறிகுறிகள் கொண்ட புகைப்படங்களை அலசி, ஒப்பு நோக்கி, ஒருவருக்கு என்ன சத்து குறைவாக இருக்கிறது என்று தெரிவித்துவிடும்.
அது மட்டுமல்ல, அந்தக் குறைபாட்டை போக்க என்ன வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த செயலியே பரிந்துரைக்கிறது.
பின்வரும் காலத்தில், சத்துணவு வல்லுனர்கள் மற்றும் வைட்டமின் தயாரிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையிலும் இந்த செயலியை மேம்படுத்த, அஜ்மான் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Share it if you like it