செவ்வாய் கிரகத்தை வட்டமிட்ட மங்கள்யான், அங்கு வீசும் புயல் காட்சிகளை படம் படித்து பூமிக்கு அனுப்பி அசத்தியது. அதேபோல, அமெரிக்காவின் நாசா அனுப்பிய இன்சைட் என்ற ஊர்தி, அண்மையில் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் ஓசைகளை பூமிக்கு அனுப்பிஉள்ளது.
செவ்வாயின் வளி மண்டலத்தில் ஏற்படும் காற்றுவீச்சின் ஓலம், செவ்வாய் மண், கற்கள் உரசும் ஓசை, இன்சைட் லேண்டர் ஊர்தியின் உலோகக் கருவிகள், வெப்பமடைந்து மீண்டும் குளிர்ச்சி அடையும்போது எழும் உலோக சப்தங்கள் என்று பல ஓசைகளை இன்சைட் ஊர்தி ஒலி வடிவில் அனுப்பியுள்ளது.
இவற்றோடு இதுவரை, செவ்வாய் தரைப் பரப்பில் ஏற்பட்ட, 21, நில அதிர்வுகளையும், இன்சைட்டிலுள்ள நில அதிர்வு அளக்கும் கருவி பதிவு செய்து அனுப்பியுள்ளது.
காட்சி யுகமான இந்தக் காலத்தில், வேற்றுகிரகத்தில் ஏற்படும் ஓசைகளைக் கேட்பதும் அதிசயமாக இருப்பது விநோதம் தான்.
செவ்வாயில் கேட்கும் ஓசைகள்!
Share it if you like it
Share it if you like it