விக்ரம் லேண்டரை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்தவர்..!

விக்ரம் லேண்டரை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்தவர்..!

Share it if you like it

இஸ்ரோ நிலவை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டர் எனும் ஆய்வுக்கலனை செலுத்தியது. ஆனால் விண்கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும்போது விக்ரம் லேன்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டர் நிலவில் எந்த பகுதியில் விழுந்தது, என்பதை அறிய நாசாவின் உதவியை நாடியது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். நாசாவினாலும் விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில் சென்னையை சார்ந்த சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியியல் வல்லுநர் ஒருவர் லேண்டர் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிந்து அதை பற்றிய தகவலை நாசாவுக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளார். நாசா விஞ்ஞானிகள் இத்தகவலை ஆராய்ந்து பார்த்து அவரை பாராட்டியுள்ளனர். அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் சண்முக சுப்பிரமணியனை பாராட்டிவருகின்றனர்.


Share it if you like it