திக, திராவிட சிந்தனையாளர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், பிரிவினைவாதிகள், தமிழக மக்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்த இன்று வரை மிகப்பெரிய சூழ்ச்சி வலையை பின்னி வருகிறார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை..
தமிழகத்திற்கு என்றே தனி கொடி ஒன்றினை அமைத்து. தமிழ் நாடு விழா என்று அதற்கு பெயர் வைத்து.. இணையவழி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கோவை பேருர் மடத்தின் ஆதினம் மருதாசலம் அடிகளார் கலந்து கொள்வதாக அறிவிப்பை பிரிவினைவாதிகள் விளம்பரம் செய்து இருந்தனர்.. .
இந்நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் அனைவருமே இந்து விரோத- தேச விரோத நபர்கள் என்று அவருக்கு பலரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர்..
இது குறித்து பேருர் ஆதினம் இவ்வாறு கூறியுள்ளார்..
மற்ற பேச்சாளர்கள் பற்றிய விபரம் தன்னிடம் சொல்லப்படவில்லை எனவும் ‘தமிழ்நாடு விழாவில்’ ஆசியுரை வழங்க வேண்டும் என தன்னிடமும் மற்றொரு ஆதினத்திடமும் தெரிந்த நபர் அழைத்ததின் பேரில் அந்த நிகழ்ச்சிக்கு தாம் ஒப்புக் கொண்டதாக ஆதினம் கூறியுள்ளார்… பிரிவினைவாதிகள் பற்றிய முழு தகவல் அறிந்த பின்பு இரண்டு ஆதினங்களும் மேற்படி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாமல் முற்றுபுள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..