மக்களவையில் குடியுரிமை மசோதா தாக்கல்

மக்களவையில் குடியுரிமை மசோதா தாக்கல்

Share it if you like it

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மதரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவானது எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த சட்டத்திருத்த மசோதாவின் மூலம் மேற்கூறிய மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வரும் ஹிந்து, கிறிஸ்தவ, ஜெயின், பார்சி, சீக்கியர் மற்றும் பௌத்த மதத்தை சார்த்த சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். மேலும் அவர்கள் சட்டஉதவியை பெறுவதற்கும் வழிவகை செய்யப்படும். மக்களவையில் பா.ஜ.க பெரும்பான்மையாக உள்ளதால் சட்டத்திருத்த மசோதா எளிதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Share it if you like it