தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் காட்டு தர்பார் அரசியலை விரும்பாமல்… அக்கட்சியில் இருந்து பல மூத்த தலைவர்கள் விலகி தங்களை பா.ஜ.கவில் இணைத்து வருகின்றனர்..
மம்தா பானர்ஜியின் வலது கரம் என்று அழைக்கப்படும் சுவேந்து ஆதிகாரி.. முதல்வரின் ஆணவ போக்கு பிடிக்காமல்.. அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது…
சுவேந்து ஆதிகாரி விலகினால் அவரின் பின்னால் 65 எம்.எல்.ஏக்கள் செல்ல கூடும் என்றும் இதனால் திரிணாமுல் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்..
மேற்கு வங்க பா.ஜ.க பொறுப்பாளராக அமித்ஷா பதவி ஏற்றதில் இருந்தே மம்தா பேனர்ஜி மோடி மீதும், அமித்ஷா மீதும் கடும் குற்றச்சாட்டுக்கள் வைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது…
பாவம் சங்கிகள். இந்த சுவேந்து அதிகாரி கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே செல்லா காசாக போனார் . சுவேந்துவின் செல்வாக்கு அவரது பகுதியில் வீழ்ந்து விட்டது. அவரது பகுதியில் உள்ள 13 நாடாளுமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகள் பாஜகவிடம் சென்று விட்டது. எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் சுவேந்து வின் செல்வாக்கு வீழ்ந்து விட்டது. எனவே தான் சுவேந்து பாஜக வுக்கு ஓடுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை விடவும் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 3% சதவிகிதத்துக்கும் மேலே அதிகரித்து உள்ளது. சுவேந்து வின் நாடகமும் , அவர் போடும் வேஷமும் மே. வங்க மக்களிடம் எடுபடாது.