Share it if you like it
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பன்னாட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார். இதில் பல்வேறு நாடுகளை சார்ந்த 70 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
பத்திரிகையாளர்கள் கேட்கும் எல்லாவிதமான கேள்விகளுக்கும் மோகன் பகவத் பதில் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ் முக்கிய செயல்பாட்டாளர் கூறியதாவது “சங்கத்தை பற்றி தவறான புரிதலோடு அயல் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன அதை மாற்றவும், சங்கத்தின் தேசிய கொள்கைகள் பற்றியும் சமூக சேவைகளை பற்றியும் எடுத்துரைக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு” என கூறினார்.
சமீபத்தில் தான் ஆர்.எஸ்.எஸ் தலைவரை இந்தியாவுக்கான ஜெர்மானிய தூதர் வால்டர் லிண்டர் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it