மீண்டும் வெற்று விளம்பரம் தேடிய Drama Queen..!

மீண்டும் வெற்று விளம்பரம் தேடிய Drama Queen..!

Share it if you like it

எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் தம்மை தாக்கி விட்டதாக. மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அண்மையில் மிகப் பெரிய பொய் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இது திட்டமிட்ட நாடகம் என்று அம்மாநில பாஜக மூத்தலைவர்கள் முதல் உட்பட பல எதிர்க்கட்சிகள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

மம்தா பானர்ஜி போன்ற ஒரு வலிமை வாய்ந்த முதலமைச்சரையே பிஜேபி இப்படி தாக்குமென்றால். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மற்றும் சாதாரண மக்களின் கதி என்ன? என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பாஜக மீது வீண்பழியை சுமத்தி இருந்தார்.

மோடி, பாஜக, மத்திய அரசை, விமர்சனம் செய்வதையே வழக்கமாக கொண்ட  நாடக ஜோதிமணி அவர்கள் மீண்டும் பா.ஜ.க மீது வீண் பழியை இவ்வாறு சுமத்தியுள்ளார்.

மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தமிழகத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது குறித்து பிரதமர் மோடி அவர்களுக்கு தான் கடிதம் எழுதி உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான அக்சிஜன் கையிருப்பில் உள்ளது.  ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் தமிழகத்திற்கு உண்டு. 240 மெட்ரிக் டன்கள் மட்டுமே தமிழகத்திற்கு தேவை உள்ள நிலையில். மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் அண்டை மாநிலங்களுக்கு தமிழகம் ஆக்சிஜன் அனுப்பி வருகிறது என்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அறிவித்து உள்ளது.

தி.மு.க நடத்தும் பத்திரிக்கை, செய்தி ஊடகங்கள், கழக ஆதரவு பெற்ற ஊடகங்களின் செய்திகளை பார்த்து விட்டு. பாரதப் பிரதமரை இழிவுப்படுத்துவது, வெற்று விளம்பரத்திற்காக, பிரதமருக்கு கடிதம், எழுதுவதை நிறுத்திக் கொண்டு. இனி மேலாவது ஆக்கபூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it