’காயம்’ காக்கும் வெங்காயம்!

’காயம்’ காக்கும் வெங்காயம்!

Share it if you like it

வெங்காயத்தின் நன்மைகள் என்ன?

“தமிழர்களின் ஆதிகால உணவு பட்டியலில் வெங்காயமே முதலிடம். காரணம் வெங்காயம் உணவல்ல அது ஒரு மருந்து!”

சக்தி, “Energy” நோய் எதிர்ப்பு சக்தி வெங்காயத்தில் அதிகம் உள்ளது, அடிக்கடி சளி தொல்லை இருப்பவர்களுக்கு வெங்காயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.அரிப்பு, மற்றும் காயத்திற்கு வெங்காய சாறு ஒரு மருந்து.

உடல் அசதிக்கு, பாதத்தில் வைத்த்து இருக கட்டி உறங்கினால், மறுநாள் காலையில் உடல் வலி நீங்கும் மாத்திரையே தேவையில்லை.அலர்ஜி, கை கால்களில் ஏதோ படர்தாமரை போல இருக்கிறது… வெங்காயத்தை அரைத்து உடலில் தேய்த்து சிறிது நேரத்திற்கு பிறகு குளித்தால் அலர்ஜி நீங்கும்.

முகத்தில் கருப்பு புள்ளி, வெங்காய துண்டை வைத்து அடிக்கடி முகத்தில் லேசாக தடவினால் கரும்புள்ளி நீங்கும்.ஏப்பம், வாயு, பிரச்சினை, வெங்காயத்துடன் தேனை கலந்து சாப்பிட்டால் வாயு பிரச்சினை நீங்கும்.

தொப்பை குறைக்க, காலையில் வெறும் வையிற்றில் வெங்காய சாறு, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, இதனுடன் ஒரு கரண்டி தேன் கலந்து பதமாக கொதிக்க வைத்து தினமும் வெறும் வைற்றில் குடித்தால் அடி வையிற்றின் கொழுப்பு குறைந்துவிடும்.சிறுநீரக கோளாறு நீங்கும், நீர் கடுப்பை தவிர்க்கும், சிறுநீர் மஞ்சள் நிறமாக போகிறது என்றால், உணவில் அடிக்கடி வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இரத்த அழுத்தம், சின்ன வெங்காயம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் “Blood Presure” குறையும்.

சொத்தை பல், பல் வலி, பல் வெண்மைக்கு, பூச்சிப் பல் நீங்க வெங்காய துண்டை கொண்டு பல் துலக்க வேண்டும், பல் வெண்மைக்கு வெங்காயத்தை பற்கலில் தேய்த்தால் போதும், பல் வலிக்கும் அந்த இடத்தில் வெங்காய துண்டை வாயில் வைத்து உறங்கினால் வலிக்கும் பல் விழுந்துவிடும்.

 

“இனியும் உணவில் வெங்காயத்தை தவிர்க்க வேண்டாம், உணவே மருந்து மருந்தே உணவு”.


Share it if you like it